டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் ஈட்டி எறிதல், மல்யுத்தம் போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பேட்மிட்டண் ,குத்துச்சண்டை ,துப்பாக்கி சுடுதல் ,வில்வித்தை போன்ற பல்வேறு போட்டிகளில் இந்திய அணி வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதுவரை இந்திய அணி 2 வெள்ளிப் பதக்கங்களும், 3 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 5 பதக்கங்களை பெற்றுள்ளது. […]
