மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்த தொழிலாளிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருத்தங்கல் பகுதியில் கூலி தொழிலாளியான முருகபாண்டி(44) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2009-ஆம் ஆண்டு முருக பாண்டி தனது மனைவி மற்றும் மாமியார் கமலா ஆகியோரை வீட்டிற்குள் பூட்டி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
