சென்னை உயர் நீதிமன்றத்தில் யானைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த 14-ஆம் தேதி காஞ்சிக்கோடு-வளையாறு இடையே ரயில் தண்டவாளத்தை கடப்பதற்கு யானை கூட்டம் முயற்சி செய்தபோது ரயில் மோதியதில் 2 பெண் யானைகள் பலியானதோடு ஒரு குட்டி யானை மாயமாகியுள்ளது என்றனர். இது சம்பந்தமாக தெற்கு ரயில்வே பாலக்காடு மண்டல பொது மேலாளர் நீதிமன்றத்தில் நவம்பர் 24-ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் […]
