தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பைத் தொடா்ந்து சென்னை உயா் நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் ஆன்லைன் வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், இன்று (பிப்.7) முதல் நேரடி விசாரணைக்கு அனுமதி வழங்கி பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயா் நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நேரடியாகவும், […]
