யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. இதற்கு முன்னதாக, மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பை தமிழக பாஜக பதிவுசெய்து வந்தது. இந்தநிலையில், மாரிதாஸ் வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்பை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மாரிதாஸிற்கு அறிவாலயத்தின் எதிர்கால நெறுக்கடி, அறிவாலயத்திற்கு சட்டம் தந்தது சவுக்கடி, வாய்மையே வெல்லும். இது தமிழக அரசின் முத்திரை வாசகம். […]
