மதம் மாறியவர்களுக்கு ஜாதி மறுப்பு திருமணத்திற்கான சான்று வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த கிறிஸ்துவ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தனக்கு ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்க கோரி விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மேட்டூர் வட்டாட்சியர் மதம் மாறியவர்களுக்கு ஜாதி மறுப்பு மணச்சான்று வழங்க முடியாது என்று […]
