திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு கன்னிவாடியில் இருந்து அரசு பேருந்து கடந்த 31- ஆம் தேதி வந்தது. இந்நிலையில் உரிய நடைமேடையில் பேருந்தை நிறுத்துவதற்காக ஓட்டுநர் வாகனத்தை திருப்பி உள்ளார். அப்போது கண்டக்டர் மாணவர்களை விலகி நிற்குமாறு கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த மாணவர்கள் ஓட்டுநர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா […]
