கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பார்வதிபுரத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிலத்தில் இருக்கும் கடைகளை பூட்டி சீல் வைத்தனர். அதன்படி பார்வதிபுரத்தில் இருக்கும் ஒரு சங்க அலுவலகத்திற்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது சங்க அலுவலகத்திற்குள் முருகன் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை வழிபட அனுமதி வழங்க கோரி சிலை வைத்தவர்கள் மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த […]
