கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற திண்டிவனத்தை சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் தவறான கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்காமல் தவறவிட்டிருக்கிறார். பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 92 மதிப்பெண்கள் பெற்றவர் விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கான கருணை மதிப்பெண்ணை வழங்க கோரி மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் மனு அளித்து இருந்தார். அவர் மனு பரிசீலிக்கபடாத நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். […]
