நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியல் வெற்றிகரமாக 300 எபிசோடுகளை நிறைவு செய்துள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2020 பிப்ரவரி மாதம் முதல் ஜீ தமிழ் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் நீதானே எந்தன் பொன்வசந்தம் . இந்த சீரியல் துலா பஹ்ட் ரே என்கிற மராத்தி சீரியலின் ரீமேக் ஆகும். இதில் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாகவும் தர்ஷனா அசோகன் கதாநாயகியாகவும் நடித்து […]
