நீண்ட வாள் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் காவல்துறையினர் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் இளைஞர் ஒருவர் நீண்டவாள் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் இந்திரா நகரை சேர்ந்த தாவூத்இப்ராகிம் என்பவது தெரியவந்துள்ளது. மேலும் தாவூத்இப்ராகிம் மீது வழக்குபதிவு செய்து […]
