அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தென்காசி, நெல்லை மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை டவுன் தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்கள் குறித்து பேசினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின் போது அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள். தேர்தல் நேரத்தில் நான் முதல்வரானால் முதல் கையெழுத்து நீட் தேர்வு […]
