சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவை விதி எண் 110-ன் கீழ் பேசியதாவது “7½ கோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபலிக்கும் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதா கடந்த 210 தினங்களாக கிண்டி கவர்னர் மாளிகை வளாகத்தில் முடங்கிக் கிடக்கிறது. நூற்றாண்டு பார்த்த தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட அந்த சட்டமசோதா கிண்டி கவர்னர் மாளிகை வளாகத்தில் கிடக்கிறது. தமிழகமக்களின் உணர்வுகளைத் அடுத்து நாம் அனைத்து மன்றங்களிலும் எதிரொலிப்பதோடு, அவர்களது உரிமையையும் நிலைநாட்டுவோம். […]
