நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மத்திய அரசின் கேள்விகளுக்கு சட்டரீதியாக பதிலளிக்க தயார் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தேசிய ஓட்டுரிப்பு அறுவை சிகிச்சை தினத்தை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் தெரிவித்ததாவது “இந்த மருத்துவமனையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது. 6000 பேருக்கு செயற்கை கை கால்கள் வழங்கப்பட்டுள்ளது. கைவிரல் துண்டிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்டிக் […]
