தஞ்சையை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரும் வழக்கறிஞருமான 68 வயதான ராமமூர்த்தி என்பவர் நாளை மறுநாள் நடைபெற உள்ள நீட் நுழைவு தேர்வை எழுத உள்ளார். படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை ஏற்கனவே பலமுறை நிரூபித்துள்ளார். அதாவது 28 டிகிரி முடித்து சாதனை படைத்துள்ளார். தற்போது நீட் தேர்வு எழுதுவதின் மூலம் தனது நீண்ட கால ஆசையான டாக்டராக வேண்டும் என்ற கனவுக்கு தொடர்ந்து வெளிச்சம் கொடுத்து வருகிறார். இளைஞர்களுக்கு ரோல் மாடலாக விளங்குகிறார். […]
