நீட் தேர்வு மருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை என்பது நீட் தேர்வு அடிப்படையில் நடைபெற்று வருகின்றது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் உள் ஒதுக்கீடு என்பது மிக மிக அவசியமான ஒன்று என்றுதான் கல்வியாளர் தரப்பிலிருந்து முன்வைக்கக்கூடிய கருத்தாக இருக்கின்றது. கடந்த ஆண்டைப் பொறுத்தவரை அரசு கல்லூரிகளில் 2600 மாநில ஒதுக்கீட்டு இடங்களாக […]
