கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் மேட்டுதிருக்காம்புலியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் 10 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். மேலும் மாநில அளவில் நடைபெறும் நீச்சல் போட்டிக்கு மாணவிகள் தகுதி பெற்றனர். சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கனகராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் அமுதா, […]
