குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குலுமூர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12ஆம் வகுப்பு முடித்த பிரகாஷ் மற்றும் பிரவீன்குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கவுல்பாலயத்தில் வசிக்கும் அவரது பெரியம்மாள் வள்ளி வீட்டிற்கு வந்து தங்கியிருந்தனர். இதனையடுத்து கள்ளாங்குத்துப் பகுதியில் இருக்கும் கல்குவாரி அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் குளிப்பதற்காக பிரகாஷ் மற்றும் […]
