மழை வேண்டி கிராமவாசிகள் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் மூடநம்பிக்கையை உணர்த்துவதாக உள்ளது. கல்வியறிவு என்பது நம் நாட்டில் உயர்ந்தாலும் மூடநம்பிக்கை என்பது மக்களுக்கு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மழை இல்லாமல் வாடிய கிராமவாசி மக்கள் மழை வேண்டி நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம். உத்தரபிரதேச மாநிலம் நிவாரி மாவட்டத்தில் ஒரு குக்கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள கிராமவாசிகள் மழை வேண்டி இரண்டு நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். […]
