மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சுரங்கப்பாதைகளில் நீர் புகுந்து போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை நீரானது தாழ்வான பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளில் புகுந்துள்ளதால் அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை அடுத்து மழைநீரால் சூழ்ந்துள்ள பகுதியில் இருப்பவர்கள் தங்குவதற்கு வசதியாக மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் கோவில்கள் என […]
