Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் கோர விபத்து…. 9 பேர் பலி….. 28 பேர் படுகாயம்…. பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு….‌!!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி மாவட்டத்தில் நேற்று இரவு கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தில் உள்ள ப்ரமுக் சுவாமி மகாராஜா சதாப்தி விழாவில் கலந்து கொண்டு சிலர் பேருந்தில் திரும்பி கொண்டு இருந்தனர். இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 9 பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த […]

Categories
மாநில செய்திகள்

குமுளி மலைச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ 2 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!

தேனி மாவட்டம் குமுளி மலைச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் உட்பட 10 நபர்கள் சபரிமலை கோவிலுக்கு சென்று திரும்புகையில் அவர்கள் வந்த வாகனம் நேற்று இரவு (23ஆம் தேதி) உத்தமபாளையம் வட்டம் குமுளி மலைப்பாதையில் எதிர்பாராத விதமாக விழுந்து விபத்துக்குள்ளானது. இச்செய்தியை […]

Categories
மாவட்ட செய்திகள்

மழை நிவாரணம் வழங்குங்கள்… விவசாய தொழிலாளர்கள் சாலை மறியல்… போக்குவரத்து பாதிப்பு..!!!

மழை நிவாரணம் வழங்க கோரி விவசாய தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட உயிர்களை மீண்டும் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட கூரை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து விவசாயம் கூலி தொழிலாளர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதானம்-சீர்காழி சாலையில் மறியலில் […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல்: நிவாரணம் எப்போது…. ? அமைச்சர் முக்கிய அப்டேட்…!!!

இரு தினங்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இதனால் வீசிய சூறாவளி காற்றில் ஏராளமான படகுகள் சேதமடைந்தன. இந்நிலையில், மாமல்லபுரம் அருகே தேவனேரி மீனவர் குப்பத்தில் ஆய்வு செய்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சேதங்களை மீன்வளத்துறை அதிகாரிகள் துள்ளியமாக ஆய்வு செய்வர். பிறகு முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். கடந்த 10 ஆம் தேதியன்று மாண்டஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள், மழை சேத விவரங்கள், நிவாரண […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல்… எந்தெந்த படகுகளுக்கு எவ்வளவு நிவாரணம்…? அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விளக்கம்…!!!!

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மாண்டஸ் புயல் பாதிப்பால் சேதமடைந்த படகுகளில் எந்தெந்த வகை படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாடு மையத்தில் சனிக்கிழமை ஆய்வு பணிகளை மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது கூறியதாவது, புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் மிகப்பெரிய உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது. மேலும் புயல் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

புயலால் சேதமடைந்த படகு… நிவாரணம் வழங்குவது எப்போது…? அமைச்சர் பேட்டி…!!!!!

அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக வலுப்பெற்றது. அதன் பின் புயலாக வலுவிழந்து மாமல்லபுரம் அருகே நேற்று இரவு 10 மணிக்கு கரையை கடக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, சுமார் 5 மணி நேரத்திற்கு பின் அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்துள்ளது. இதனையடுத்து இன்று காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த  தாழ்வு மண்டலமாக இருக்கும் அந்த புயல் அதன் பின் படிப்படியாக […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் பாதிப்பு…. விரைவில் நிவாரணம் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…..!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
மாவட்ட செய்திகள்

டிராக்டர் விபத்தில் பலியான சிறுவனின் குடும்பத்திற்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ..!!

டிராக்டர் விபத்தில் பலியான சிறுவனின் குடும்பத்திற்கு ரூபாய் 6 லட்சம் நிவாரணம் வழங்கினார் தென்காசி எம்எல்ஏ பழனி நாடார். தென்காசி மாவட்டம் சுரண்டையில்  தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாருக்கு சொந்தமான டிராக்டர் ஒன்று 4 வயது சிறுவன் ராஜாமுகன் மீது மோதியது. இதில்  சம்பவ இடத்திலேயே சிறுவன்பரிதாபமாக உயிரிழந்தான். இதனை தொடர்ந்து இன்று காலை சிறுவன் உடல் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பாக பெற்றோர்கள், உறவினர்கள் சட்டமன்ற உறுப்பினர் நேரில் வந்து பார்த்த […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுக்கு ரூ.1000 – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு …!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் உதவி வழங்க அரசாணையானது வெளியாகி இருக்கிறது. தமிழக அரசின் உடைய வருவாய் நிர்வாக ஆணையர் எஸ். கே பிரபாகரன் வெளியிட்டுள்ள அரசாணையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறிப்பாக இரண்டு வட்டங்களுக்கு சீர்காழியில் 99, 518 குடும்ப அட்டைதாரர்கள்,  தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கு கிட்டத்தட்ட 1,60,000 ரேஷன் கார்டுதரர்களுக்கு நிதி ஒதுக்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. ரேசன் கடைகள் மூலமாக இந்த நிதி என்பது […]

Categories
மாநில செய்திகள்

மழை நிவாரணம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு …!!

தமிழக அரசின் உடைய வருவாய் நிர்வாக ஆணையர் எஸ். கே பிரபாகரன் வெளியிட்டுள்ள அரசாணையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறிப்பாக இரண்டு வட்டங்களுக்கு சீர்காழியில் 99, 518 குடும்ப அட்டைதாரர்கள்,  தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கு கிட்டத்தட்ட 1,60,000 ரேஷன் கார்டுதரர்களுக்கு நிதி ஒதுக்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. ரேசன் கடைகள் மூலமாக இந்த நிதி என்பது விநியோகம் செய்யப்படும். இதற்கான மொத்த தொகையாக 16 கோடி ரூபாயை தமிழக அரசு , கும்பகோணம் மத்திய கூட்டுறவு […]

Categories
மாநில செய்திகள்

வெளியில் தங்குவோருக்கு ரூ.24,000…. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களின் நலனுக்காக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சீரமைப்பு பணியின் போது வெளியில் தங்குவோருக்கு 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேதமடைந்த கட்டிடங்களை கட்டுவதற்கு கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஆகும் என்பதால் வெளியே தங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதனால் இதில் தங்கி இருந்தவர்கள் வாடகைக்கு வெளியில் தங்க வேண்டிய நிலை […]

Categories
மாநில செய்திகள்

ரூ 1000 போதாது..! குடும்ப அட்டைதாரர்களுக்கு 3,000 ரூபாய் வழங்க வேண்டும்…. வலியுறுத்தும் ஈபிஎஸ்.!!

மழையால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு ரூ 3,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.. மயிலாடுதுறையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மழை வெள்ளத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சவுதி அரேபியாவிற்கு சென்ற வாலிபர் திடீர் உயிரிழப்பு… காரணம் என்ன…? கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு அளித்த பெண்…!!!!!

சவுதி அரேபியாவிற்கு சென்ற மீன் பிடி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்பாலைக்குடி காந்தி நகரை சேர்ந்த முனீஸ்வரன் என்பவரது மனைவி ஞான சிந்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, எனக்கு முனீஸ்வரன் கனவர் உள்ளார். எங்களுக்கு திருமணம் ஆகி மூன்று வயதில் இசையமுதன் என்ற மகன் இருக்கின்றான். இந்நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக என்னுடைய கணவர் முனீஸ்வரன் கடந்த வருடம் மீன்பிடித் தொழில் செய்வதற்காக […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, அதற்குரிய நிவாரணங்களையும்  அறிவித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம் பாடி பகுதிக்கு  நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டது மட்டுமில்லாமல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் […]

Categories
தேசிய செய்திகள்

கார் மீது பேருந்து மோதி 11 பேர் பலி…. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்…. பிரதமர் மோடி அறிவிப்பு….!!!

மத்தியப்பிரதேசம் பெதுல் மாவட்டத்தில் ஜல்லார் போலீஸ் நிலையம் அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இவற்றில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அத்துடன் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் விபத்துக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருவதாக மாவட்ட எஸ்.பி. பெதுல் சிமலா பிரசாத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பெதுலில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை […]

Categories
தேசிய செய்திகள்

140க்கும் மேற்பட்டோர் பலி…. “குஜராத் பாலம் அறுந்து விழுந்தது எப்படி?”….. வெளியான சிசிடிவி வீடியோ.!!

குஜராத்தில் பாலம் அருந்து விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் மோர்பியில்  உள்ள கேபிள் பாலத்தில் நேற்று மாலை 6 மணியளவில் 400க்கும் மேற்பட்டோர் சென்றபோது, எடை தாங்காமல் அந்த பாலம் அருந்து விழுந்தது. இதனால் 400க்கும் மேற்பட்டோர் மச்சு ஆற்றில் தவறி விழுந்தனர். இதனையடுத்து உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. இரவு பகலாக மீட்ப பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது. இதுவரைக்கும் 140-க்கும் மேற்பட்டவர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

. குஜராத்தில் சோகம்…! குழந்தைகள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் பலி…. நிவாரணம் அறிவிப்பு… மேலும் உயர வாய்ப்பு..!!

குஜராத்தில் மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் மோர்பியில் சத்பூஜைக்காக சென்றபோது கேபிள் பாலம் திடீரென அறுந்து விழுந்ததில் முதற் கட்டமாக 32 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது 60க்கும் மேற்பட்ட நபர்கள் பலியாகியுள்ளதாக அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்துள்ளார். மேலும் பாலத்தில் 500 பேர் இருந்ததாகவும், ஆற்றுக்குள் 400 க்கும் மேற்பட்டோர் விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பலி […]

Categories
தேசிய செய்திகள்

400 பேருக்கு என்ன ஆச்சு?….. பலியானோர் குடும்பத்திற்கு ரூ 6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.!!

குஜராத் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு மத்திய அரசு சார்பில் 2 லட்சமும், மாநில அரசு சார்பில் 4 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் மோர்பியில் கேபிள் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் தற்போது 32 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். சத்பூஜைக்காக சென்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. மேலும் பாலத்தில் 500 பேர் இருந்ததாகவும், ஆற்றுக்குள் 400 க்கும் மேற்பட்டோர் விழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆற்றில் விழுந்த […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் வெள்ள நிவாரண நிதியில் ஊழல்… வெளியான தகவல்… கடுங் கோபத்தில் பிரபல நாடு…!!!!!

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 1,700 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12,800 பேர் காயமடைந்து இருக்கின்றனர். இது தவிர 20 லட்சம் வீடுகள் சேதுமடைந்தோ அல்லது முற்றிலும் அழிந்தோ இருக்கிறது மேலும் 79 லட்சம் பேர் வீடுகளை விட்டு புலம்பெயர்ந்து சென்றிருக்கின்றனர். 5.98 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர் 25,100 பள்ளிகள் சேதம் அடைந்துள்ளது. 7000 பள்ளிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா  வெள்ள நிவாரணம் மற்றும் மனிதநேய […]

Categories
மாநில செய்திகள்

ரூ.25,00000 நிவாரணம் வழங்க வேண்டும்…. ஓபிஎஸ் அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!!

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் ஆலந்தூர் மெட்ரோ அருகே இருக்கக்கூடிய ராட்சத சாலை வழிகாட்டி பலகை திடீரென பெயர்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து, வேன், ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது விழுந்ததில் ஒருவர் இறந்த நிலையில், இரண்டு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் வழிகாட்டி பலகை விழுந்து விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சம்பவம் தனக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு நிவாரண உதவி செய்ய வேண்டும்…. கோரிக்கை விடுக்கும் கிராம மக்கள்….!!!!!!!!!

ஆனைமலை தாலுகா பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஆனைமலையை அடுத்த அம்பராம்பாளையம் செல்லும் வழியில் சுந்தரபுரி பகுதியைச் சேர்ந்த தங்காய்(60), குருசாமி (36) என்பவர்கள் வசித்து வருகின்றனர். கூலி  தொழிலாளர்களான  இவர்கள் நேற்று வேலைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் மதியம் மூன்று மணி அளவில் அந்த பகுதியில் பலத்த காற்று கூடிய கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கிருந்து 70 ஆண்டுகள் பழமையான பெரிய மரம் வேருடன் சாய்ந்து தங்காய் […]

Categories
மாநில செய்திகள்

இந்த மனசு தாங்க கடவுள்…‌ யாசகம் பெற்ற பணம்…. நிவாரணமாக கொடுத்த முதியவர்….!!!!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிநகர் பகுதியைச் சேர்ந்த சன்யாசி பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவில் கோவிலாக சென்று பிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் பிச்சை எடுத்து சேர்த்து வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் வங்கி கிளை மூலமாக இலங்கை தமிழர்களுக்காக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்காக அனுப்பி வைத்து அதன் ரசீது வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் […]

Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரி டீக்கடை விபத்து….. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு….!!!!

கன்னியாகுமரி டீக்கடை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கன்னியாகுமரி மாவட்டம், பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ள ஷபிக் என்பவரின் டீக்கடையில் இன்று காலை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த  விபத்தில் கடையில் வேலை பார்த்து வந்த மூசா, பிரவீன், சேகர் மற்றும் அங்கு தேநீர் அருந்த வந்த சுப்பையன், சுதா, சந்திரன், சுசீலா […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு ஆலை விபத்து… 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார் முதல்வர்.!!

கடலூர் எம்.புதூரில் சிறிய நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வாணவேடிக்கை பட்டாசுகள் வெடித்துச் சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது. இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும், உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா 3 லட்ச ரூபாய் வழங்க […]

Categories
தென்காசி

“நாய் கடித்து பாதிக்கப்பட்ட 30 பேர்”… மாவட்ட நகராட்சி தலைவி நிவாரண உதவி….!!!!!

நாய் கடித்து பாதிக்கப்பட்ட 30 பேருக்கு நகராட்சி தலைவி நிவாரண உதவி வழங்கியுள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடியில் நேற்று முன்தினம் 30க்கும் மேற்பட்டவர்களை நாய் கடித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்கள். இதையடுத்து தகவலறிந்த நகராட்சித் தலைவி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களையும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களையும் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறியிருக்கிறார். மேலும் அவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கியுள்ளார். இதையடுத்து மக்களை கடித்த நாயை கண்டு பிடிக்குமாறு நகராட்சி […]

Categories
மாநில செய்திகள்

கெடிலம் ஆற்றில் மூழ்கி பலியான 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ 5 லட்சம் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் வேதனை..!!

கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி பலியான 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ 5 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் அருகே இருக்கும் கெடிலம் ஆற்றில் குளிப்பதற்காக 7 பேர் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக நீரில் மூழ்கி 7  பேரும்  மயக்கம் அடைந்துள்ளனர்.. அந்த சமயம் அப்பகுதியில் சென்ற மக்கள் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை என்பதால் சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது, இவர்கள் அனைவரும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கல்குவாரியில் உரிமம் தடைசெய்யப்பட்டது” ஆய்வு செய்த அதிகாரிகள்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அடைமிதிப்பான்குளம் பகுதியில் கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் கடந்த 17-ஆம் தேதி ராட்சத பாறை ஒன்று சரிந்து விழுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்து விட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய  படுகாயம் அடைந்த 2  பேரை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். இதனை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் சென்று […]

Categories
மாநில செய்திகள்

கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு….. ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவிப்பு….!!!!

நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் 6 பேர் சிக்கிய நிலையில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து 300 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் கல்குவாரியில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். பாறை சரிந்ததில் பள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய […]

Categories
மாநில செய்திகள்

#தேர் விபத்து: அதிமுக சார்பில் தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி…. ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு..!!

தஞ்சை அருகே தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் களிமேட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்  15 பேர் படுகாயமடைந்த நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தாக்குதலுக்குள்ளான பெண் எஸ்.ஐ….. ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…..!!!

பாதுகாப்பு பணியின் போது தாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ.க்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். நெல்லையில் தாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ. மார்கரெட் தெரசாவை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் பெண் எஸ்.ஐ.க்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.  

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீனவர்களுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்குக….. மநீம வலியுறுத்தல்….!!!!

மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூபாய் 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா ஆகிய கடற்பகுதிகளில் ஏப்ரல் மே ஜூன் ஆகிய மாதங்களில் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்படும். இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டு மீன்பிடி தடை […]

Categories
மாநில செய்திகள்

சித்திரை திருவிழா…. 2 பேர் உயிரிழப்பு… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. இதில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம்,  தேர்த்திருவிழா போன்றவை முடிவுற்ற நிலையில் பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் பிரம்மாண்டமாக நடைபெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா இறப்பு இழப்பீடு வேணுமா…. அப்போ உடனே இத செய்யுங்க…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

கொரோனா இழப்பிற்கான இழப்பீடு பெறுவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவிட் – 19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in இணையத் தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் (Death Ascertaining Committee) மூலம் பரிசீலனை செய்யப்பட்டு  வருகிறது. இதுவரை 74,097 மனுக்கள் பெறப்பட்டு 55,390 இனங்களுக்கு ரூ.50,000/- வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், 13,204 மனுக்கள் ‘இருமுறை […]

Categories
அரசியல்

முன்னாள் அமைச்சர்கள் ஒரு லட்சம் நிவாரணம்….!! மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு…!!

சென்னை-சேலம் பசுமை வழி சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் வைத்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு போராட்டத்திற்கு பிறகு சக கட்சியினருடன் சேர்ந்து ஒரு ஹோட்டலில் உணவருந்தி உள்ளார். அப்போது திடீரென வந்த செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி உதவி ஆய்வாளர்கள் முத்துக்குமாரசாமி மற்றும் ராஜசேகர் ஆகியோர் முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபுவை லத்தியால் சரமாரியாக […]

Categories
அரசியல்

டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி…!! அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு…!!

டெல்லியில் உள்ள கோகுல்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் ஏராளமான குடிசைகள் மளமளவென பற்றி எரிந்தன . இந்த கொடூரமான தீ விபத்தில் 7 பேர் பலியாகினர். சம்பவ இடத்தை சம்பவ இடத்தை ஆய்வு செய்த டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்த துயர சம்பவம் கேட்டு மிகவும் வருத்தம் அடைவதாகவும் இறந்தவர்களின் ஆன்மாக்கள் இறைவனடி சேர வேண்டிக் கொள்வதாகவும் கூறினார். […]

Categories
மாநில செய்திகள்

பாட்டாசு ஆலை வெடி விபத்து…. பறிபோன 4 உயிர்…. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு…..!!!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பட்டாசு ஆலை […]

Categories
உலக செய்திகள்

இத்தனை கோடியா…? ஆப்கானிஸ்தான் பணத்தை இரண்டாக பங்கிட்ட அமெரிக்கா….

அமெரிக்க அரசு தங்களிடமிருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்குரிய 52 ஆயிரத்து 500 கோடி ரூபாய் தொகையை நிவாரணம் மற்றும் இரட்டை கோபுர தாக்குதலில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு வழங்க தீர்மானித்திருக்கிறது. தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியவுடன், வெளிநாடுகளில் இருக்கும் அந்நாட்டிற்குரிய சொத்துக்கள் முடக்கப்பட்டது. அந்தவகையில், அமெரிக்காவில் ஆப்கானிஸ்தான் நாட்டிற்குரிய 52 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய வங்கிக்குரிய அந்த பணத்தை இரண்டு பங்குகளாக பிரித்து வழங்க தீர்மானித்திருக்கிறது. அதில் ஒரு பங்கை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நடுத்தர மக்களுக்கு துரோகம் பண்ணிட்டீங்க!”…. பட்ஜெட்டில் பகீர்…. காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

நாட்டில் உள்ள நடுத்தர வகுப்பினருக்கு மத்திய பட்ஜெட்டில் எந்த நிவாரணத்தையும் அறிவிக்காமல் பிரதமர் நரேந்திர மோடியும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் துரோகம் இழைத்துள்ளனர் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தலைமை செய்தித் தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் உயர் பணவீக்கம், ஊதியக் குறைப்பு ஆகியவற்றின் காரணமாக நடுத்தர வகுப்பினர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பணவீக்கம் மற்றும் முழு ஊதிய குறைப்பை முறியடிக்க நடுத்தர வர்க்கத்தினர் நிவாரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் மத்திய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் ரூபாய் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள எஸ்.புதூரில் பயன்பாட்டில் இல்லாத கட்டடம் இடிந்து விழுந்தது. இவ்வாறு கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி வீரசேகரன், சதீஷ்குமார் என்ற 17 வயது சிறுவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதில் காயமடைந்த மற்றொரு சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பாதுகாப்பற்ற இந்த கட்டடத்தை அகற்ற ஊராட்சி […]

Categories
தேசிய செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து…. உயிழந்தவர்களுக்கு நிவாரணத்தொகை….!!!!

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தினால் சுமார் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 28 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த தீ விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் பிரதமரின் தேசிய […]

Categories
உலக செய்திகள்

ஒட்டுமொத்தமாக முடங்கிய ‘டோங்கா’…. ‘அக்கறையுடன் ஓடி வரும் அண்டை நாடுகள்’…. நெகிழ்ச்சி தகவல்….!!!!

கடந்த சனிக்கிழமை அன்று பசுபிக் தீவு நாடான டோங்காவில் திடீரென கடலுக்கடியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியது. இதனால் சுனாமி அலைகள் எழுந்து பேரழிவு உண்டானது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே விமான நிலையத்தில் ஓடு பாதை முழுவதும் சாம்பலால் மூடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவை அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து விமானம் ஒன்று அந்நாட்டுக்கு நிவாரண பொருள்களை வழங்குவதற்காக டோங்காவில் வந்து தரையிறங்கியுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலிய விமானமும் உதவி பொருள்களுடன் டோங்காவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விவசாயிகளுக்கு 2 நாட்களில்…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பயிர்கள் சேதமடைந்தது. அவற்றை கணக்கிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து அமைச்சர்கள் குழு நவம்பர் 16ம் தேதி பயிர் சேதம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்ததை அடுத்து முதல்வர் முக. ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்தார். அதாவது கணக்கெடுப்பின் அடிப்படையில் 4.44 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு 3.16 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக 168.35 கோடி ரூபாய், முதல்வரால் விடுவிக்கப்பட்டது. அதன்பின் பயிர் நிவாரணம் தொகை அந்தந்த மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு ஆலை வெடி விபத்து…. தலா ரூ.3 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள மஞ்சள் ஓடைப்பட்டி என்ற கிராமத்தில் கருப்புசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசு வெடி மருந்து உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 அறைகள் இடிந்து தரைமட்டமானது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கட்டிட இடிபாடுகளில் இருந்து 7 பேரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தால் 50,000 ரூபாய் நிவாரணம்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் கொரோனோ தொற்று கடந்த சில தினங்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு வெளியாகும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2020ஆம் வருடம் முதல் தற்போது வரையிலும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் இதுவரை 36 ஆயிரத்து 805 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50,000 ருபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை கடந்த டிசம்பர் 8ஆம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அரசின் மெத்தன போக்கை வன்மையா கண்டிக்கிறேன்!”…. உரிய நிவாரணம் குடுங்க…. எடப்பாடி பழனிசாமி காட்டம்….!!!!

எடப்பாடி பழனிச்சாமி டெல்டா மாவட்டங்களில் கிட்டத்தட்ட 8 லட்சம் ஏக்கர் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தண்ணீரில் மூழ்கி நாசமானதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி அவர்களுக்கு உரிய நிவாரண உதவி வழங்குமாறு கூறியுள்ளார். மேலும் சுமார் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையங்களில் முறையான பராமரிப்பு இல்லாததால் வீணாக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே அரசின் இந்த மெத்தனப் போக்கை வன்மையாக கண்டிப்பதாக எடப்பாடி தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் வேளாண் துறை அதிகாரிகளை பாதிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

மக்களே…! ஹேப்பி நியூஸ்… கொரோனா நேரத்தில்…. நிதி ஒதுக்கிய பிரபல நாடு….!!

ஜெர்மன் அரசாங்கம் கொரோனா காலகட்டத்தை முன்னிட்டு தனிநபர்கள் மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு உதவும் நோக்கில் சுமார் 30 பில்லியன் யூரோக்களை வரி நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒதுக்கியுள்ளது. ஜெர்மன் நாட்டின் நிதி அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா காலகட்டத்தை முன்னிட்டு தனிநபர்கள் மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு உதவும் விதமாக ஜெர்மன் அரசாங்கம் சுமார் 30 பில்லியன் யூரோக்களை வரி நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து…. ரூ.1,00,000 நிவாரணம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

சென்னை திருவொற்றியூர் கிராம தெருவில் அரிவாக்குளம்  குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அவரவர் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறிய சற்று நேரத்தில் இடிந்து விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இரவு நேரத்தில் குடியிருப்பில் திடீரென விரிசல் ஏற்பட்டதாக அங்கு வசித்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த குடியிருப்பு கட்டிட விபத்தில் பாதிப்படைந்த 24 குடும்பங்களுக்கு தலா ரூ.1,00,000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு மாற்று […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. இன்று முதல் இவர்களுக்கு ரூ.3000…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் பல அதிரடியான திட்டங்களையும் எடுத்து வருகிறது. இந்நிலையில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் ரூ.3000 உதவித் தொகையை டிசம்பர் 21(இன்று) முக ஸ்டாலின் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 3 […]

Categories
மாநில செய்திகள்

பலியான 3 மாணவர்களின் குடும்பத்திற்கு….. ரூ.10 லட்சம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு…!!!!

நெல்லையில் அரசு உதவி பெரும் தனியார் பள்ளியின் கழிவறை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது எட்டாம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஸ்வரங்சன் உள்ளிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்குள்ள பள்ளி மாணவர்கள் இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து பள்ளி விபத்தில் உயிரிழந்த 3 […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : குன்னூர் விபத்து…. கேரள வீரருக்கு நிவாரணம் அறிவிப்பு….!!!!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கேரள விமானப்படை வீரர் பிரதீப் குடும்பத்தினருக்கு ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்க உள்ளதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில் சம்பவம் நடந்த தினத்தில் மூன்று பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்ட நிலையில், மற்ற ராணுவ வீரர்களின் உடல்கள் பிரேத […]

Categories

Tech |