கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணத் தொகையை அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தருவை அடைமிதிப்பான் குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14.05.2022 அன்று திடீரென்று மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு […]
