Categories
மாநில செய்திகள்

“மக்களே உஷார்” தீவிர புயலாக மாறிவிட்டது…. 1,2 மணி நேரத்தில் மாறும்…. வானிலை மையம் தகவல்…!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மையம் அதிதீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று மாலை கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பொது அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயலின் தற்போதைய நிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், “தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் தற்போது தீவிர புயலாக […]

Categories
மாநில செய்திகள்

“நிவர்” கரையை கடப்பதை நீங்க பார்க்கணுமா…? இந்த லிங்க் மூலமா பார்க்கலாம்…. வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

நிவர் புயல் கரையை கடக்கும் போது பார்க்க விரும்புவர்களுக்கு வானிலை ஆய்வு மையத்தால் இணையதள முகவரி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை மதியம் கரையை கடக்க உள்ள நிலையில், இந்த நிகழ்வை காண ஆசைப்படுபவர்கலுக்காக சென்னை வானிலை மையம் ஒரு சில ஏற்பாடுகளை செய்துள்ளது. நிவர் புயல் தற்போது சென்னையில் இருந்து 430 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த புயலானது நாளை மதியம் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

தீவிர புயலாக மாறிய ”நிவர்”….. நண்பகலுக்குள் அதிதீவிர புயலாக மாறும் …!!

தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிவர் புயல் நகர்வு குறித்து சற்று முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வங்கக் கடலில் உருவான நிவர் புயல், அதி தீவிர புயலாக நண்பகலுக்குள்  உருமாறும். 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும். நிவர் புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே இன்று இரவு கடையை கடக்கும் என தெரிவித்தார். அதிகாலை 2 மணிக்கு கடலூருக்கு 310 கிலோ மீட்டர், புதுச்சேரிக்கு 320 கிலோ மீட்டர், […]

Categories
தேசிய செய்திகள்

“பொது மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்” – ராகுல் காந்தி வேண்டுகோள்

நிவர் புயலின் தாக்கம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் இருப்பதால், பொது மக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும் படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். நிவர் புயலின் தாக்கம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் இருப்பதால், பொது மக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும் படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவரது டிவிட்டர் பதிவில், பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும், தேவைப்படுபவர்களுக்கு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

”இது சும்மா ட்ரைலர்தான்…மெயின் பிக்சர் இனிமேதான்” – நிவர் புயல் குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான்

நிவர் புயலால் நாம் எதிர்பார்த்ததைவிட சென்னையில் அதி தீவிர மழை பெய்யும் எனத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார். வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த நிவர் புயல், இன்று (நவ.24) புயலாக மாறியுள்ளது. தற்போது இப்புயல் சென்னையின் தென் கிழக்கே 430 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், நிவர் புயல் இன்னும் தீவிரமடையுமே தவிர பலவீனமடைய வாய்ப்பில்லை என்றும் தமிழ்நாடு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புயல், தமிழகத்தில் காய்கறி, மளிகை பொருட்கள் – அதிரடி உத்தரவு …!!

நிவர் புயல் நாளை கரையைக் கடக்கும் இருக்கும் நிலையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மக்கள் நலன் சார்ந்து பாதுகாப்பு பணிகளை முடுக்கி விடப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீவிரமாக புயலை கண்காணித்து, தடுப்பு – மீட்பு  பணிகள் தயார் நிலையில் இருக்கின்றன. இதனிடையே தமிழக அரசு சார்பில் பல்வேறு உத்தரவுகள், கட்டுப்பாடுகள், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

Flash News: நாளை இதற்க்கு மட்டும் அனுமதி – அரசு புதிய உத்தரவு …!!

தமிழகத்தில் நாளை நிவர் புயல் கரையை கடக்கும் இருக்கும் நிலையில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சம்பந்தப்பட்ட 7 மாவட்டங்களுக்கு போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயலை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்படும் நிலையில் அதற்கான உத்தரவையும், முன்னேற்பாடுகளையும் செய்துவருகின்றது. குறிப்பாக தமிழகத்தில் நாளை பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், புதுவை, நாகை, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பெரும் ஆபத்தாக மாறி வரும் புயல் – அரசு பரபரப்பு அறிவிப்பு …!!!

மிக அதி தீவிர புயலாக நிவர் நாளை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 140 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் புயல் பாதிப்பு மீட்பு பணிக்காக  12 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள்,  4377 முகாம்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் நாளை கரையைக் கடக்க இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

நிவர் புயல்… 370 கிலோமீட்டர் தொலைவு… புதுச்சேரி கடற்கரை மூடப்பட்டது..!!

நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் கடற்கரையில் மூடப்பட்டுள்ளது. நிவர் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தீவிர புயலாக மாறியுள்ளது. இது நாளை மாலை காரைக்கால்-மகாபலிபுரம் இடையே புதுகை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் தமிழக அரசு மற்றும் புதுவை அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது புதுச்சேரியிலிருந்து 370 கிலோ மீட்டரில் நிவர் புயல் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

நாளை இதற்கு மட்டும் அனுமதி – தமிழக அரசு புதிய அறிவிப்பு..!!

புயல் காரணமாக நாளை பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நிவர் புயல் நாளை கரையைக் கடக்க இருப்பதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், புதுகை, நாகை, […]

Categories
மாநில செய்திகள்

எந்நேரமும் அழைப்பு வரும்… தயார் நிலையில் இருங்கள்… உள்ளாட்சி ஊழியர்களுக்கு அறிவிப்பு..!!

புயல் பாதிப்பை எதிர்கொள்ள அனைத்து இடங்களும் உள்ளாட்சிகளில் பணிபுரியும் ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க தயார் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இந்த புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வுமையம் கடுமையாக எச்சரித்துள்ளது. இருப்பினும் தமிழகம் முழுக்க உஷாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. புயல் பாதிப்பால் ஏற்படும் வெள்ள சேதம் உள்ளிட்ட நிவாரணப் பணிகளை […]

Categories
மாநில செய்திகள்

நாளை பேங்குக்கு லீவு… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

நிவர் புயல் காரணமாக நாளை ஒருநாள் வங்கிகள் இயங்காது என முதலமைச்சர் அறிவித்துள்ளார். நிவர் புயல் சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இந்த புயல் இன்று மாலை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் நாளை காரைக்கால் மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் […]

Categories
சற்றுமுன் பல்சுவை புதுச்சேரி மாநில செய்திகள் வானிலை

”380கி.மீ” தான் இருக்கு… வந்துகிட்டு இருக்கு…. யாரையும் வீடாதீங்க… சீல் வைக்க உத்தரவு …!!

நிவர் புயல் காரணமாக புதுவை கடற்கரை மூடி சீல் வைக்கப்பட்டு, மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  புதுச்சேரியில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டிருக்கும் நிலையில் புதுச்சேரியின் கடற்கரை பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. புதுச்சேரி கடற்கரை முழுவதும் மூடப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரி கடற்கரையில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இங்கு இருந்து அப்புறப்படுத்தபட்டு வருகின்றார்கள். மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள புதுச்சேரி கடற்கரையில் முழு பகுதியில் தற்போது போலீஸ் கட்டுப்பாட்டில் […]

Categories
சற்றுமுன் பல்சுவை

காற்று அதிகமாகிட்டு…. அலை வேகமா அடிக்குது… எல்லாரும் வெளிய போங்க… மூட உத்தரவு போட்டாச்சு …!!

நிவர் புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் புதுச்சேரி கடற்கரையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக புதுச்சேரி கடற்கரை மூடப்பட்டிருக்கிறது. புதுச்சேரி கடற்கரையில் இருந்து பொதுமக்களை காவல்துறையினர் வெளியேறுகிறார்கள். வங்க கடலில் உருவான நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 380 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இதற்காக புதுச்சேரி கடற்கரை தற்போது மூடப்பட்டிருக்கிறது. நிவர் புயல் ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. இது புதுச்சேரிக்கும் – காரைக்காலுக்கும் இடையே கரையை […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

கடல் கொந்தளிக்கும்…. 2மீட்டருக்கு அலை உயரும் … 110கி.மீ வேகத்துல காற்று… ”நிபர்” வருது அலர்ட் …!!

வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தற்பொழுது ”நிவர்” புயல் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தற்பொழுது அதன் நகரும் வேகம் குறைந்துள்ளது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெற கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

நிவர் புயல் – மக்‍களின் பாதுகாப்பு, நல்வாழ்வுக்காக பிரார்த்திக்‍கிறேன்

நிவர் புயல் பாதிப்பை எதிர்கொள்ள தமிழகம் மற்றும் புதுவைக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு முழுமையாக வழங்க என பிரதமர் மோடி உறுதி தெரிவித்துள்ளார் . நிவர் புயல் நாளை மாலை காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தால்  வட தமிழகத்தில் வழியாக தெலுங்கானா மாவட்டத்தின் வழியாக சென்று 26-ஆம் தேதி மும்பை பகுதிகளில் வலுவிழந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயலை ஒட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதி கனமழை பெய்து வரும் நிலையில் நிலைமை […]

Categories
மாநில செய்திகள்

‘நிவர்’ புயல் எச்சரிக்கை… நாம் செய்ய வேண்டியதும்… செய்யக்கூடாததும்.. என்னென்ன..?

புயல் வருவதற்கு முன் கூட்டி நாம் செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காண்போம். நிவர் புயல் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுவடைந்துள்ளது. நேற்று மாலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் நிவர் புயலாக உருவாகி உள்ளதை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மாலை காரைக்கால் மாமல்லபுரம் பகுதியில் புயல் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் வருவதற்கு முன் நாம் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கனமழை ..!!

நிவர் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலை கொண்டிருந்த நிவர் புயல் நாளை காரைக்கால், மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

நிவர் புயல்எதிரொலி; குரூப்-4 கலந்தாய்வு ஒத்திவைப்பு!

நிவர் புயல் காரணமாக குரூப்-4 ல் தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குருப்-4 தேர்வில் 2018-19 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளுக்கான தட்டச்சர் பதவிக்கு கடந்தாண்டு செப்டம்பர் 1ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, கொரோனா பாதிப்பின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கடல் கொந்தளிப்பு – 2வது நாளாக மீனவர்கள் செல்லவில்லை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை ஒட்டிய கடல் பகுதியில் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. 1500-க்கும் மேற்பட்ட படகுகளில் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட உள்ளனர். நிவர் புயல் தீவிரமடைந்துள்ளதால் கடல் பகுதியில் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையொட்டி உள்ள பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் உள்ளது. மரக்காணம், கூனி மேடுக்குப்பம், அனிச்ச குப்பம், கோட்டகுப்பம், முதலியார் சாவடி, அனுமந்தை குப்பம் உள்ளிட்ட 19 கிராமங்களில் மீனவர்கள் 2-வது நாளாக நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை. படகு மட்டும்  அலைகளை பாதுகாப்பான […]

Categories
மாநில செய்திகள்

அதிதீவிர புயலின் போது…. எச்சரிக்கை கூண்டுகள்… ஏற்றப்படுவதற்கான அர்த்தம் இது தான்…?

புயல் காலங்களில் ஏற்றப்படும் எச்சரிக்கை கூண்டுகளுக்கு என்ன அர்த்தம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. புயல் ஏற்படும் காலங்களில் கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் எச்சரிக்கை செய்யும் விதமாக புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது. இது புயல், காற்று வீசும் திசை, புயல் கரையை கடக்கும் போன்ற பல விஷயங்களை உணர்த்தும் வண்ணம் 1 முதல் 11 வரை கூண்டுகள் ஏற்றப்படுகின்றன. இதற்கான அர்த்தம் என்னவென்று இப்போது தெரிந்து கொள்ளலாம். 1-ம் எண் கூண்டு: புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் […]

Categories
மாநில செய்திகள்

முழு கொள்ளளவை எட்டும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி …!!

நிவர் புயல் காரணமாக பூந்தமல்லி, மதுரவாயல் பகுதிகளில் கன மழை பெய்துள்ள நிலையில் இதே நிலை தொடர்ந்தால் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வங்க கடலில் உருவாகி வரும் நிவர் புயல் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மதுரவாயல், பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சென்னையில் கனமழை – செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் …!!

நிவர் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. சென்னையில் தண்ணீர்தேவை பூர்த்தி செய்யும் நீர் தேக்கங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளன. அம்மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக நீர் தேக்கங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. மதுரவாயல், பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

24 மணி நேரம் இருக்கு…. தீவிர புயலாக மாறும் ”நிவர்”…. வெளியான முக்கிய அப்டேட் ….!!

அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தற்பொழுது ”நிவர்” புயல் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் புதுச்சேரியில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. தற்பொழுது அதன் நகரும் வேகம் குறைந்துள்ளது. இது அடுத்து வரும் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

1இல்ல, 2இல்ல 8மாவட்டம்… இன்றும், நாளையும்”.. 110கி.மீ காற்று வீசும்… அடுத்தடுத்து அலர்ட் …!!

நிவர் புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இதுகுறித்தன தகவல்களை உடனுக்குடன் தெரிவித்து வருகின்றது. அந்த வகையில்,  திருவண்ணாமலை, புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், காரைக்காலில் நாளை அதிக கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

இனிமேல் பேருந்து ஓடாது – மக்களே உஷாரா இருங்க… அரசு போட்ட உத்தரவு …!!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பிற்பகலில் இருந்து இரண்டு நாட்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்திலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்திருந்த நிலையில் அதனை ஒட்டி தற்போது தஞ்சை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்து சேவை நிறுத்தப்பட்டு இருப்பதாக சற்றுமுன் செய்தி வெளியாகியது. தொடர்ந்து தற்போது புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பிற்பகலில் இருந்து இரண்டு நாட்களுக்கு பேருந்து சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மணி 1 ஆகிட்டு இனி – பேருந்து சேவை இயங்காது – உத்தரவு அமல் …!!

நிவர் புயல் என்பது நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அது தொடர்பான அறிக்கையை நேற்று முதலமைச்சர் வெளியிட்டார். இதில் மிக முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

3 நாட்களுக்கு முழு முடக்கம் – மிக மிக முக்கிய அறிவிப்பு …!!

புதுச்சேரியை பொருத்தவரை தற்போது நிவர் புயல் என்பது நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதை அறிவுறுத்தும் விதமாகத்தான் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 7 எச்சரிக்கை கூண்டு ஏற்றிவிட்டால் இந்த பகுதியை புயல் தாக்கும் அல்லது கடக்கும் என்று பொருள்படும். இதனிடையே முன்னேஎச்சரிக்க நடவடிக்கையாக தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் 26 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு இருக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

”நிவர்” புயல் வருது…. இப்போதைக்கு தேர்வு இல்லை…. டிசம்பர் மாதம் எழுந்துங்க… மாணவர்களுக்கு உத்தரவு …!!

சி ஏ தேர்வுகள் நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், காஞ்சிபுரம், காரைக்கால், கும்பகோணம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவள்ளூர், விழுப்புரம், மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இன்று மற்றும் நாளை நடைபெற இருந்த இந்த தேர்வுகள் டிசம்பர்  மாதத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாளை நடைபெறக்கூடிய  தேர்வுகள் வரக்கூடிய டிசம்பர் மாதம் 9-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. தற்போது இருக்க கூடிய ஹால் டிக்கெட்டை வைத்து டிசம்பர் மாதம் […]

Categories
மாநில செய்திகள்

நிவர் புயல் எதிரொலி… விடுமுறை அறிவிப்பு… அரசு அதிரடி…!!!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது. அது விரைவில் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் அவரவர் வீடுகளிலேயே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நிவர் புயல் தீவிரம்… சென்னைக்கு மிக அருகில்… வானிலை ஆய்வு மையம்…!!!

வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் சென்னையிலிருந்து 470 கிமீ தொலைவில் நிலை கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து நிவர் புயலாக மாறி நாளை கரையைக் கடக்க உள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையிலிருந்து நிவர் புயல் 470 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. மேலும் புதுச்சேரியிலிருந்து 440 கிமீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

நெருங்கியது நிவர் புயல்… மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் நிவர் புயல் சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதால் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப் பெற்ற பின்னர் தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 420 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 360 கிமீ தொலைவிலும் புயல் […]

Categories
மாநில செய்திகள்

Alert: நெருங்கியது நிவர் புயல்…. மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறி மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகர்கிறது. தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதால் நாளை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் […]

Categories
மாநில செய்திகள்

“நிவர் புயல் முன்னெச்சரிக்கை” நீங்கள் என்னென்ன செய்யவேண்டும்..? செய்ய கூடாது…? வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

நிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் மக்கள் புயலின் போதும், புயலுக்கு பின்னும் என்ன செய்ய வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக மாறும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு நிவர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிவர் புயல் நாளை 25ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள கரையைக் கடக்கலாம் என்றும், […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

உடனே போங்க…. எல்லாம் வச்சுக்கோங்க…. அதிரடி உத்தரவு போட்ட முதல்வர் …!!

நிவர் புயல் நாளை மறுதினமும் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அது தொடர்பான அறிக்கையை முதல் அமைச்சர் வெளியிட்டார். இதில் மிக முக்கியமான மிக மிக முக்கியமான புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Big Breaking: 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் …!!

நிவர் புயல் என்பது நாளை மறுதினம் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அது தொடர்பான அறிக்கையை முதலமைச்சர் வெளியிட்டார். இதில் மிக முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு உள்ளேயும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் ..!!

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை பெற்று  பின்னர் புயல் சின்னமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் சின்னம் வரும் 25-ஆம் தேதி மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

சென்னை நோக்கி வரும் ”நிவர் புயல்”…. 120 கி.மீ. வேகத்தில் காற்றுவீசும்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை …!!

நிவர் புயல் கரையை கடக்கும் போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் தீவிர புயலாக நாளை மறுநாள் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நகருகின்றது. புயல் கரையை கடக்கும்போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருக்கின்றது. சென்னையிலிருந்து 590 கிலோ மீட்டர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை நெருங்கும் புயல்… வெளியான புகைப்படம்… மக்களுக்கு எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலின் செயற்கைக்கோள் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் வங்கக் கடலில் புதிய நிவார் புயல் உருவாகி இருப்பதால் பொதுமக்களுக்கு மூன்று நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலின் செயற்கைக்கோள் புகைப்படம் மற்றும் கரையிலிருந்து புயல் மையத்தின் தூரம் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும்போது குறைந்தபட்சம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்… கடும் எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் விரைவில் கரையை கடக்கும் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்றுள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 740 கிமீ புதுச்சேரியில் இருந்து 700 கிமீ தொலைவில் […]

Categories

Tech |