நில பிரச்சனையில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள ஜாமீன்இளம்பள்ளியில் தமிழ்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவருக்கும் நிலப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சின்னசாமியின் மனைவி சந்திராவிடம் தமிழ்செல்வன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த தமிழ்செல்வன் அருகிலிருந்த கடப்பாரையை எடுத்து சந்திராவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை பார்த்த அவரது […]
