மத்திய அரசின் நிலவளத்துறை இணைச் செயலாளர் சோன்மோனி போரா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி நாடு முழுதிலும் உள்ள பல்வேறு மக்கள் நில ஆவணங்களை கையாள்வதில் மொழி பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக தற்போது நில ஆவணங்களில் மொழிபெயர்ப்பு முறையை மத்திய அரசு கொண்டுவர திட்டமிடப் பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் எழுதப்படும் நில ஆவணங்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் உட்பட 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். இதற்கான புதிய மென்பொருளை ரூபாய் 11 கோடியில் உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. […]
