நம்பியூர் அருகே நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் அருகே இருக்கும் கரட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஓணான்கரடு கிராமத்தில் பல வருடங்களாக ஒருவரின் நிலத்தை அங்குள்ளவர்கள் பாதையாக பயன்படுத்தி வந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் அந்த நிலத்தை வேறொரு நபருக்கு விற்பனை செய்து இருக்கின்றா.ர் நிலத்தை வாங்கியவர் சுற்றிலும் வேலி அமைத்ததால் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்த பாதையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது. […]
