நிலைவாசல் சரிந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடக்குவாசல் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மேகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் 2-ஆம் வகுப்பு படிக்கும் பிரீத்தி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ப்ரீத்தி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் பொருத்தப்படாமல் வைக்கப்பட்டிருந்த நிலைவாசலில் ஏறி விளையாடியுள்ளார். இதில் திடீரென நிலைவாசல் […]
