தேனியில் நிலுவையிலிருக்கும் நிதியை தரக்கோரி ஒப்பந்ததாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மகாத்மா காந்தியின் தேசிய ஊரக பணி உறுதியளிப்பு திட்டம் கீழ் தடுப்பணை, கழிப்பறை போன்ற பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்ததாரர்கள் மூலப்பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் ஆண்டிப்பட்டி தொகுதியில் மட்டுமே ஒப்பந்தக்காரர்களுக்கு 2,29,4700 ரூபாயை இன்றளவும் மூலப்பொருட்கள் வழங்கியதற்காக அரசு வழங்கவில்லை. இதனை கண்டித்து அவர்கள் பலமுறை அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவர்கள் […]
