நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுரக் குடிநீரை மக்கள் குடிக்கலாம் என தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா தடுப்புக்கு பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது மருத்துவர்கள் அச்சப்பட வேண்டாம், அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆரோக்கியம் சிறப்புத் திட்டம் அறிமுகம செய்யபட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் […]
