நில ஆக்கிரமிப்பு குறித்து நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கொரக்கத்தண்டலம் பகுதியில் வசித்து வரும் தனபால் என்பவர் எறையூர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது தந்தை ஆறுமுகத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த போலீசார் உடனடியாக தனபால் கையில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை கைப்பற்றி […]
