Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்….!! ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவு…!!

தெற்கு போஸ்னியாவில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் லுபின்ஜே நகரத்திற்கு வடகிழக்கே 14 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதாக கருதப்படும் பகுதியிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெல்கிரேட், ஜாக்ரெப் மற்றும் ஸ்கோப்ஜே வரை இந்த நடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அல்பேனியா மற்றும் தெற்கு இத்தாலியிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

யாருமே எதிர்பார்க்கல…. திடீர்னு வந்துருச்சு…. அச்சத்தில் ஆப்கான் மக்கள்….!!

பைசாபாத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் பைசாபாத் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று காலை 6.14 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது என தேசிய மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது பைசாபாத்திலிருந்து 117 கிலோமீட்டர் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ளதாகவும் தரைப்பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பயங்கர நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவு….!!!!

நேற்று இரவு பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மானாய் நகரில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.5ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 51 கி.மீ தூரத்தில் மானாய் நகரின் தென்கிழக்கு திசையில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் பூமியின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 51.33 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 6.0-ஆக ரிக்டர் அளவில் பதிவு…!!!

இந்தோனேசியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தோனேசியா, பசிபிக் பெருங்கடல்-இந்தியப் பெருங்கடல் பகுதியில் தீவுக்கூட்டங்கள் ஆயிரக்கணக்கில் உடைய நாடாக இருக்கிறது. மேலும், பூமத்திய ரேகையினுடைய மையப்பகுதியில் இருப்பதால் அடிக்கடி அங்கு நிலநடுக்கம் உணரப்படுகிறது. இந்நிலையில், அங்கு இன்று காலை நேரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. ஸ்லவைசி என்ற தீவின் கொடம்பகு பகுதியிலிருந்து வடகிழக்கில் சுமார் 779 கிலோ மீட்டர் தூரத்தில் இன்று காலை நேரத்தில் பசுபிக் பெருங்கடலில் நிலநடுக்கம் உருவானது. இது ரிக்டர் அளவில் […]

Categories
தேசிய செய்திகள்

அந்தமான் நிக்கோபார் தீவில் 2 வது முறை நிலநடுக்கம்… ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு….!!!!!!

அந்தமான் நிகோபார் தீவில் 2 வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கம் மையம் அறிவித்துள்ளது. அந்தமான் நிகோபர் தீவில் இன்று காலை 7.02 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது  என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலையில், அந்தமான் நிகோபர் தீவில் இன்று 2வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது.  இது குறித்து  தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள செய்தியில், அந்தமான் நிகோபர் தீவில், கேம்ப்பெல் பே […]

Categories
உலக செய்திகள்

தைவானில் உருவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 5.7- ஆக ரிக்டர் அளவுகோளில் பதிவு…!!!

தைவானில் 5.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தைவான் நாட்டின் கடற்கரை பகுதிக்கு அருகில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இந்நிலநடுக்கமானது, ஹெங்சுன் என்ற நகரத்திற்கு தென்கிழக்கு பகுதியில் 44 கிலோ மீட்டர் தூரத்தில் உருவானது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால்  சேதங்கள் எதுவும் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்….!! வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி…!!

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று காலை திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் இபின் நகரின் சிங்வென் பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவாகியிருக்கலாம் என சீன நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக சாலையோரங்களில் கட்டிடங்கள் வைத்திருப்பவர்கள் அலறியடித்து ஓடும் காட்சி வெளியாகியுள்ளது. நடுக்கத்தால் மண்சரிவு ஏற்படும் காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

திடீர் நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு….!!!!

அந்தமான் நிக்கோபார் பகுதியில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள பகுதியில் இன்று மாலை திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக  பதிவாகியுள்ளது. கேம்பல் விரிகுடாவில் இருந்து வடகிழக்கே 63 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .மேலும் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது .

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பயங்கர நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு….!!!!

இன்று காலை இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0-ஆக பதிவாகி இருந்ததாக இந்தோனேசியாவின் வானிலை பருவகாலம் மற்றும் புவிஇயற்பியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஏற்கனவே இந்தோனேஷியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மேற்கு சுமத்ரா பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவு…. நில அதிர்வு ஆய்வு மையத்தின் தகவல்….!!

தெற்கு பிலிப்பைன்ஸில் திடீரென  ரிக்டர் அளவுகோலில் 5. 8 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தெற்கு பிலிப்பைன்சில் உள்ள சூரிகாவோ டெல் சுர் மாகாணம் அமைந்துள்ளது.  இந்த மாகாணத்தில் இன்று அந்நாட்டின் நேரப்படி மாலை 6.24 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக  பதிவாகியுள்ளது.  மேலும் இந்த நிலநடுக்கம் பயாபஸ் நகரில் இருந்து வடகிழக்கில் 75  கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் தரைப்பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் திடீரென நிலநடுக்கம்…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானதாக இந்திய நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு 1.10 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது திருப்பதியில் இருந்து வடகிழக்கே 85 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை

Categories
உலக செய்திகள்

நியூ கலிடோனியாவில் நிலநடுக்கம்…. விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை…. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்….!!

நியூ கலிடோனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள பிரான்சின் நாட்டில் நியூ கலிடோனியா என்ற தீவு அமைந்துள்ளது.  இந்தத் தீவில் நேற்று அதிகாலையில் அந்நாட்டு நேரப்படி 2.27 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால்  சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. இதனால் பிஜி மற்றும் கலிடோனியாவில் கடற்கரையில் அலை […]

Categories
உலக செய்திகள்

நியூ கலிடோனியாவில் நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 7.0ஆக பதிவு…. அமொிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்….!!

நியூ கலிடோனியாவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூ கலிடோனியா தீவில் டானில் என்ற பகுதி அமைந்துள்ளது.  இந்தப் பகுதியில் இன்று திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.0ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து அந்தப் பகுதியில் அடுத்தடுத்த நில அதிர்வுகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருள் சேதம் மற்றும் […]

Categories
உலகசெய்திகள்

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. அந்தமான் தீவுகளில் பரபரப்பு….!!

அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று அதிகாலை 2 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் வடக்கு அந்தமானில் உள்ள  திக்லிபூரில் இருந்து 147 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. காலதாமதமாக சென்ற ரயில்கள்…. பரபரப்பில் பிரபல நாடு….!!

குயிங்காய் மகாணத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீன நாட்டில் குயிங்காய் மகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது. மேலும்  இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மக்கள் குறைவான இடத்தில் இந்த நிலநடுக்கம் உணரபட்டதாகவும்  மேலும் இதன் மையத்தில் இருந்து 20 கிலோமீட்டர் வரை எந்த கிராமங்களும் இல்லை […]

Categories
மாநில செய்திகள்

திண்டுக்கல்லில் நில அதிர்வு… அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்… பரபரப்பு…!!!!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கே.கீரனூர், கள்ளி மந்தயம்  பகுதியில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. மூன்று முறை ஏற்பட்ட நில அதிர்வால் வீடுகளில் ஓடுகள் கீழே விழுந்து உடைந்தது. இதனால் அச்சத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் சுவர்கள் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், வீட்டை விட்டு  வெளியேறி சாலையில் மக்கள் தஞ்சம் புகுந்ததாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 5.6ஆக பதிவு…. அச்சத்தில் பிரபல நாட்டு மக்கள்….!!

ஐவாட் என்ற பகுதியில் தீடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஜப்பானிய நாட்டில் வடகிழக்கு மாகாணத்தில் ஐவாட் என்ற பகுதி அமைந்துள்ளது.  இந்த பகுதியில் நேற்று இரவு 11: 25 மணிக்கு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த  நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது என ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது  18 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கைகள்  எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் […]

Categories
உலக செய்திகள்

கிடுகிடுவென குலுங்கிய கட்டிடங்கள்…. பீதியில் மக்கள்…. பாகிஸ்தானில் பரபரப்பு….!!

ஸ்கர்டு பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் ஸ்கர்டு என்ற பகுதி அமைந்துள்ளது.  இந்த பகுதியில் நேற்று முன்தினம் திடீரென நிலநடுக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும் இது தரைப்பகுதியில் இருந்து 14.11 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த நிலநடுக்கம் வடமேற்கில் 67 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.  இந்த […]

Categories
உலக செய்திகள்

மலேசியாவில் பயங்கர நிலநடுக்கம்…. கட்டிடங்கள் குலுங்கியதால் பதறியோடிய மக்கள்…!!!

மலேசியாவில் பயங்கரமான நிலநடுக்கம் உருவாகி கட்டிடங்கள் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மலேசியாவில் இருக்கும் கோலாலம்பூர் நகரில் இருந்து 157 கிலோ மீட்டர் தூரத்தில் பயங்கர நிலநடுக்கம் உருவானது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியிருக்கிறது. இந்த கடும் நிலநடுக்கத்தில் கடைகள், வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பதறிய மக்கள் அலறியடித்துக்கொண்டு குடியிருப்புகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தார்கள். இந்த நிலநடுக்கத்தால் வேறு சேதங்கள் எதுவும் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல் தெரிவிக்கப்படவில்லை.

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்…. 6.7-ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவு…!!!

இந்தோனேசியாவில் உணரப்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி இருக்கிறது. இந்தோனேஷியாவில் லோடிங் சுமத்ரா தீவின் மேற்குக் கடற்கரையில் இன்று அதிகாலை சுமார் 04:06 மணியளவில் கடல் மட்டத்தின் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் உருவானது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையமானது இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் உடனடியாக தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறினார்கள். இந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் […]

Categories
உலகசெய்திகள்

அந்தமானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 4.1 ஆக பதிவு…!!!

அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் இன்று காலை 9 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.சுமார் 15 நிமிடங்கள் இந்த நிலநடுக்கம் நீடித்தது. பல வீடுகளில் இதனால் அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவானதாக நில அதிர்வு காண தேசிய மையம் தெரிவித்துள்ளது. அந்தமானின் டிட்லிபூர்  நகரின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தின் தாக்கம் சுமார் பத்து […]

Categories
உலக செய்திகள்

குலுங்கிய கட்டிடங்கள்…. 2 பேர் உயிரிழப்பு…. அதிர்ச்சியில் மக்கள்….!!!

சுமத்ரா தீவின் புகிதிங்கி பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 7 மணி அளவில் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவின் புகிதிங்கி பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில்  6.2 ஆக பதிவாகியுள்ளது. இதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கட்டிடங்கள் லேசாக […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்… 6.2-ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவு…!!!

இந்தோனேசியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருக்கும் வடக்கு சுமத்ரா தீவில் இன்று காலை நேரத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் பதிவாகி இருந்ததாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. காலையில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

Categories
உலக செய்திகள்

கவுதமாலா நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம்… ரிக்டர் அளவுகோலில் 6.1-ஆக பதிவு…!!!

கௌதமாலா என்ற மத்திய அமெரிக்க நாட்டில் மிகப் பெரிய நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுதமாலா நாட்டின் தலைநகரான கவுதமாலா நகரில் இன்று மிகப்பெரிய நிலநடுக்கம் உருவானது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் அந்த பகுதியில் இருக்கும் கட்டிடங்கள் குலுங்கியது. எனவே, மக்கள் பதறியடித்துக் கொண்டு வெளியில் ஓடி சென்றுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதா என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

Categories
உலக செய்திகள்

திடீர் நிலநடுக்கம் …. ரிக்டரில் 4.5 ஆக பதிவு …. வீதியில் மக்கள் ….

ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருந்து கிழக்கு வடகிழக்கில் 164 கிலோ மீட்டர் தூரத்தில் நேற்று இரவு 11.34 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.மேலும் இது  140 கிலோமீட்டர் ஆழத்திலும் ரிக்டர் அளவில் 4.5 ஆகவும்  பதிவாகியுள்ளது. இதில் வீடு மற்றும் கட்டிடங்கள் லேசாக […]

Categories
உலக செய்திகள்

குலுங்கிய கட்டிடங்கள்…. பீதியில் மக்கள்…. தகவல் தெரிவித்த சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம்….!!!

தைவானில் திடிரென நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தைவான் நாட்டின் கிழக்கு பகுதியில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது இன்று  காலை 12.43 மணியளவில் உணரப்பட்டது. மேலும் இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகயுள்ளது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் கட்டிடங்கள் […]

Categories
உலக செய்திகள்

குலுங்கிய கட்டிடங்கள்…. பீதியில் மக்கள்…. தகவல் வெளியிட்ட சீன நெட்வொர்க் மையம்….!!

தைவானில் திடிரென நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தைவான் நாட்டின் கிழக்கு பகுதியில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது நேற்று மாலை 6.58 மணியளவில் உணரப்பட்டது. மேலும் இது ரிக்டர் 5.1 ஆகா பதிவாகயுள்ளது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 34 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் கட்டிடங்கள் குலுங்கியதால் […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 6.2 என பதிவு….!!

இந்தோனேஷியாவில் உள்ள மாலுக்கு மாகாணத்தில் இன்று காலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் மாலுக்கு மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் இன்று அதிகாலை  4:25 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று  ஏற்பட்டுள்ளது.இந்நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் பதிவாகியிருப்பதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம்  கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 131 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்ததாகவும், இந்நிலநடுக்கத்தால் சுனாமி போன்ற பேராபத்து ஏற்படும் அபாயம் […]

Categories
உலக செய்திகள்

ஜூனியர்களுக்கான கிரிக்கெட் போட்டி…. திடீர் நில அதிர்வு…. பீதியில் உறைந்த பார்வையாளர்கள்….!!

மேற்கு இந்திய தீவுகளில் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது நில அதிர்வு ஏற்பட்டுள்ள, காட்சியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேற்கு இந்திய தீவுகளில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அப்போட்டி பதினாறு அணிகளுக்கு இடையில் நடைபெற்று வருகின்றன. அந்த போட்டி நேற்று அயர்லாந்து மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கான போட்டி டிரினிடாட்டின் குயின்ஸ்பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. அந்த சமயத்தில் திடீரென  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“கிடு கிடு”வென நடுங்கிய கட்டிடங்கள்…. தகவல் வெளியிட்ட அமெரிக்க புவியில் ஆய்வு மையம்….!!

டோங்கா தீவுகளில் ஒன்றான பங்காய் பகுதியில் திடீரென்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. டோங்கா தீவுகளில் ஒன்றான பங்காய் பகுதியில் நேற்று முன்தினம் திடீரென்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பங்காயிலிருந்து வடமேற்குப் பகுதியில் 219 கிலோமீட்டர் தொலைவில் 14.4 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டிருக்கிறது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் […]

Categories
உலக செய்திகள்

ஒரு “ஷேக் ஆச்சி” பாரு…. பீதியான பொதுமக்கள்…. ரிக்டரில் 5.3 ஆக பதிவு….!!

பிலிப்பைன்ஸில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்சில் தாவோ ஓரியண்டல் மாநிலத்தில் மிகவும் சக்திவாய்ந்த அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. இதனையடுத்து இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 19 கிலோ மீட்டர் ஆழத்தினை மையம் கொண்டு உருவாகியுள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பயங்கர நிலநடுக்கம்…. 6.2-ஆக ரிக்டர் அளவில் பதிவு…!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று மதியம் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று மதிய நேரத்தில் உருவான நிலநடுக்கம் 6.2 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. அந்நாட்டிலுள்ள சாரங்கானி என்ற கடலோர நகரில் மதியம் 2:26 மணியளவில் 231 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகியிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் வேறு பாதிப்புகள் உண்டானதா? என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”…. யாருமே எதிர்பார்க்கல…. பிரபல நாட்டில் பயங்கரம்…. புவியியல் ஆய்வு மையம் பரபரப்பு தகவல்….!!!!

நேற்று இந்தோனேசியா நாட்டில் உள்ள அமாஹாய் என்ற நகரில் திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் 19.8 கிலோ மீட்டர் ஆழத்தில் அளவிடப்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.5-ஆக பதிவாகியிருந்ததாகவும் புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த திடீர் நிலநடுக்கத்தால் அமாஹாய் நகரில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா ? என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்த நில நடுக்கம்: 26 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் சோகம்….!!!!

ஆப்கானிஸ்தானில் நேற்று மதியம் 2 மற்றும் 4 மணிக்கு அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் இடிபாடுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் சரிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. இந்த நிலநடுக்கம் துருக்மெனிஸ்தான் நாட்டின் எல்லை வரை உணரப்பட்டுள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! “1 வந்தாலே” தாங்க முடியாது… இதுல 2 வேறயா..? பீதியடைந்த பொதுமக்கள்…. அச்சம் தெரிவித்த அதிகாரிகள்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே அமைந்துள்ள மாநிலம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட 2 நிலநடுக்கத்தால் 26 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் பாத்கீஸ் மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் திடீரென 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் வீட்டின் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

சைப்ரஸ் நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம்….. 6.5-ஆக ரிக்டர் அளவில் பதிவு…!!

சைப்ரஸ் நாட்டில் 6.5 என்ற ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. சைப்ரஸில் மேற்கு கடற்கரைப்பகுதியில் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்,  ரிக்டர் அளவுகோலில் 6.5 என்ற அளவில் பதிவாகியிருப்பதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் கூறியிருக்கின்றது. லிமாசோல் என்ற நகரின் வடமேற்கு பகுதியில், சுமார் 111 கிலோ மீட்டர் தூரத்தில் இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் வேறு சேதங்கள் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 5.9-ஆக பதிவு….!!!!

இன்று காலை சிலி நாட்டில் உள்ள கோபியாப்போ என்ற சுரங்க நகர் பகுதியில் இருந்து வடமேற்கே கடற்கரையோர பகுதியில் சுமார் 112 கிலோ மீட்டர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

Categories
உலக செய்திகள்

“மீண்டும் ஆபத்து?”…. சீனாவில் அடுத்த அதிர்ச்சி!…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சீனாவின் கிங்காய் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் கிங்காய் மாகாணத்தில் 6.9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கத் தொடங்கின. இந்த நிலையில் மக்கள் பயத்தில் அலறி அடித்துக் கொண்டு வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தினை அருகில் உள்ள மாகாணங்களிலும் உணர முடிந்ததாக மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பலவும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

அதிகாலைப் பொழுதில்… 20 வினாடிகள்… அலறித் துடித்த பொதுமக்கள்…. பிரபல நாட்டில் ஏற்பட்ட பயங்கரம்…!!

தைவானில் நேற்று அதிகாலையில் 20 வினாடிகள் நீடித்த மிகவும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு தைவானிலுள்ள கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலைப் பொழுது சுமார் 20 வினாடிகள் நீடித்த மிகவும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடலோரத்தின் கிழக்கு பகுதியில் 64 கிலோமீட்டர் தொலைவினை மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

“அடுத்த ஆபத்து!”…. மீண்டும் நிலநடுக்கம்?…. பிரபல நாட்டில் அதிர்ச்சி….!!!!

ஆப்கானிஸ்தானில் நேற்று மாலை 5.1 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நேற்று 5.1 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது நேற்று மாலை 6.45 மணி அளவில் ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் சுமார் 204 கி.மீ ஆழத்தில் பூமிக்கு அடியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : மீண்டும் நிலநடுக்கம்….. வீட்டை விட்டு ஓடிய மக்கள்…..!!!!

இந்தோனேஷியாவை உலுக்கிய நிலநடுக்கத்தால் அச்சம் அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ரிக்டர் அளவில் 7 புள்ளி 3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மலுகு தீவின் கிழக்குப் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டது. இதனால், டார்வின் நகரில் இருந்த வீடுகள் சில விநாடிகள் வரை குலுங்கின. அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக வீதியில் தஞ்சமடைந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால், உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதற்கான தகவல்கள் வெளியாகவில்லை.

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் ஏற்பட்ட பயங்கரம்…. பீதியடைந்த பொதுமக்கள்…. இதோ… வெளியான தகவல்…!!

இலங்கையிலுள்ள கொழும்புவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் அமைந்துள்ள கொழும்பிற்கு அருகே ரிக்டரில் 4.3 ஆக பதிவாகியுள்ள மிகவும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் கொழும்பிற்கு அருகே உள்ள கடலுக்கடியில் 21 கிலோ மீட்டர் ஆழத்தினை மையம் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
உலக செய்திகள்

இலங்கையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு….!!!!

இலங்கையில் லேசான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள கொழும்பு அருகே எதிர்பாராதவிதமாக லேசான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுமார் 21 கிலோமீட்டர் ஆழத்தில் கொழும்புவுக்கு அருகே உள்ள கடலுக்கு அடியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா ? என்பது குறித்த தகவல் எதுவும் தெளிவாக தெரியவில்லை.

Categories
உலக செய்திகள்

கிரீஸில் உணரப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம்…. 5.7-ஆக ரிக்டர் அளவில் பதிவு….!!

கிரீஸ் நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டில் உணரப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.7 என்ற அளவில் பதிவாகி இருக்கிறது. இதனால் பாதிப்புகள் ஏற்பட்டதா? என்பது தொடர்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையமானது, இதற்கு முன்பு 6.1 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவித்திருக்கிறது. கிரீஸில் இருக்கும் க்ரிட் என்னும் தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், அவர்கள், […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்…. பொதுமக்கள் பீதி….!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.4-ஆக பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் எதுவும் தெளிவாக தெரியவில்லை.

Categories
உலக செய்திகள்

“பிரபல நாட்டில்” ஏற்பட்ட அதிபயங்கர தாக்கம்…. என்னன்னு நீங்களே பாருங்க..!!

ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் தெற்கே உள்ள குவாலேகாஜி என்ற பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும், ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகி இருந்ததாகவும் நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கிடையே நிலநடுக்க பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக சம்பவ இடத்திற்கு ஆய்வுக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : லடாக்கில் நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 5 ஆக பதிவு….!!!

லடாக் மாநிலத்தில் கார்கில் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது. இன்று மாலை கார்கில் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளி வந்து, சாலையில் தஞ்சமடைந்தனர். இதை தொடர்ந்து ரிக்டர் அளவுகோல் 5 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பல மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. முன்னதாக தமிழகம், வேலூர் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

ஃபர்ஸ்ட் பயங்கரவாதிகள்… இப்போது இது வா…. அடிக்கு மேல் அடிவாங்கும் பிரபல நாடு…. மதிய வேளையில் நடந்தது என்ன…? இதோ.. தகவல் வெளியிட்ட ஆய்வு மையம்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் இருந்து 489 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்ட ரிக்டரில் 4.5 ஆக பதிவாகிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகராக காபூல் உள்ளது. இந்த காபுலில் இருந்து 489 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்ட ரிக்டரில் 4.5 ஆக பதிவாகிய மிதமான நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மேற்குறிப்பிட்டுள்ள நிலநடுக்கத்தால் எந்தவித […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மீண்டும் நிலநடுக்கம்…. தமிழகத்தில் அதிர்ச்சி…. பதற்றம்…!!!

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே நான்காவது முறையாக இன்று காலை நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நில அதிர்வு ஏற்பட காரணம் என்ன? என்பது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

Categories
மாநில செய்திகள்

JUSTIN : வேலூரில் அடுத்தடுத்து 2 முறை லேசான நில அதிர்வு…. OMG….!!!!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் இன்று காலை 9.30 மணி அளவில் மீண்டும் இரண்டாவது முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த பீதி அடைந்துள்ளனர் . வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. இன்று காலை 9.30 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். பேரணாம்பட்டு சுற்றுவட்டாரத்தில் மற்றும் மூன்றாவது முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி நிலநடுக்கம்  ஏற்படுவதால், இதன் காரணத்தை கண்டறிவதற்காக […]

Categories

Tech |