ஜின்ஜியாங் பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீன நாட்டில் ஜின்ஜியாங் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று காலை திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளது என சீன நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி இரவு 9.41 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக பிரபல பத்திரிக்கை நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
