நிலத்தகராறில் தாக்கப்பட்ட விவசாயி உயிரிழந்ததால் கொலை வழக்காக மாற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள சின்னசோரகை மலையன்வளவு பகுதியில் பொன்னுவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். மேலும் விவசாயியான இவர் நங்கவள்ளி ஒன்றிய முன்னாள் கவுன்சிலராகவும், தி.மு.க. முன்னாள் ஊராட்சி செயலாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் நிலத்தகராறு காரணமாக இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பெருமாள் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 3-ந் தேதி 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. […]
