கேரளாவில் சிக்கியவர்களுக்கு புதிய நிலம் வழங்கப்படும் அரசு செலவில் வீடு கட்டித்தரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துருக்கிறார். மூணாறு அருகே ராஜ மலைப்பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 80-க்கும் மேற்பட்டோரும், 40-க்கும் மேற்பட்ட வீடுகளும் மண்ணுக்குள் புகுந்தன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 55 சடலங்கள் மீட்கப்பட்டன. 18-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் இன்னும் சிலரின் உடல்கள் தேடும் பணி […]
