பள்ளிகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்களை மீட்கப்பட்டு அதனை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கான இடங்களை அருகில் உள்ளவர்கள் ஆக்கிரமித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டிருந்தது. அதன்பேரில் உடனடி […]
