இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் 1,100 பயணிகள் ரயில்கள் ரத்து செய்ய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. மேலும் நிலக்கரி ஏற்றி செல்லும் சரக்கு ரயில்கள் விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காகவும், இந்த முடிவை எடுத்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல்வேறு மாநிலங்களில் அதிகப்படியான மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக மத்திய அரசு நிலக்கரி தட்டுப்பாட்டை […]
