திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி அய்யன் திருவள்ளுவர் இலக்கிய பேரவையின் செயலாளராக கணேசன் என்பவர் இருக்கிறார். இவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 1997-ம் ஆண்டு பொதுமக்களிடம் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் போன்றவற்றை நடத்துவதற்கும், தமிழ் இலக்கியத்தின் ஆர்வத்தை மக்களிடம் தூண்டும் நோக்கத்திலும் இந்த சங்கம் தொடங்கப்பட்டது. இது லாப நோக்கமற்ற முறையில் தொடங்கப்பட்ட சங்கம் ஆகும். அதன் பிறகு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியின் […]
