எந்த நிபந்தனைகளில் அடிப்படையிலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தக்கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு பாடம் பயின்று வருகின்றன. கடந்த ஆண்டு முதலே மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போது அரசு […]
