மருத்துவ பணியாளர்களுக்கு ரூ 50 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஏழைகள் தொழிலாளர்களுக்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ 50 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டும். கொரோனாவுக்கு எதிராக முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் வெள்ளை நிற உடை அணிந்த கடவுளாக பார்க்கப்படுகின்றனர். […]
