தொடர்ந்து பெய்துவரும் பருவமழை காரணமாக இதுவரை 28 ஏரிகள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக இந்த ஆண்டில் இதுவரை சுமார் 850 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றது. இந்நிலையில் மின்னக்கல், சேமூர், அக்கரைப்பட்டி வரை உள்ள 22 ஏரிகள் கடந்த வாரமே நிரம்பியுள்ளது. இதனை பொதுபணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்துள்ளனர். இதனையடுத்து தொடர்ந்து […]
