பிரேசிலில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் பழைய கல்லறைகளை சுத்தம் செய்து புதிய உடல்களை அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் கொரோனா தீவிரம் உச்சத்தை அடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதன்படி நாளொன்றிற்கு சுமார் 75,000 மேற்பட்ட நபர்கள் பாதிப்படைகின்றனர். அதில் தினசரி 3, 800 க்கும் அதிகமானவர்கள் பலியாகின்றனர். மேலும் நாட்டிலேயே மிகப் பெரிய நகரான சாவோ பவுலோ என்ற நகரில் […]
