கொரோனா அச்சம் காரணமாக முதியவர் ஒருவரை கிராமத்தினர் ஊருக்கு வெளியே படகு ஒன்றில் தனிமைப்படுத்தி வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்குவங்க மாநிலம் நடியா (Nadia) மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆன்மீக பாடகர் நிரஞ்சன். இவர் பாடல் பாடுவதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது வழக்கம்.அந்தவகையில், நிரஞ்சன் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கடந்த வாரம், மேற்குவங்க மாநிலம் மால்டாவிற்கு சென்றிருந்தார். அப்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததன் காரணமாக போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், […]
