வங்காளதேச அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து -வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. […]
