மேட்டுப்பாளையம் – நெல்லை இடையே இயங்கும் கோடைகால சிறப்பு ரயில் கிணத்துக்கடவு போத்தனூரில் நின்று செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து நெல்லைக்கு வாராந்திர கோடைகால சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகின்றது. இந்த ரயில் பொள்ளாச்சி, கோவை, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, ஒட்டன்சத்திரம், சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, ராஜபாளையம், பாவூர்சத்திரம், அம்பை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கின்றது. மேட்டுப்பாளையத்திலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 7.45 […]
