சாலையில் தேங்கிக் கிடந்த மழை நீரில் முதியவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வட்டபழஞ்சி பகுதியில் மேரி கமலம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் காஞ்சாம்புறம் பகுதியில் உள்ள ஒரு கடையில் பால் வியாபாரம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மேரிகமலம் எப்போதும் போல் கடையை திறப்பதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் 3 நாட்களாக பெய்த கன மழையால் சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கி கிடந்ததால் மேரிகமலம் […]
