வாழ்கையில் நடைபெறும் இருவேறு சம்பவங்களுடன் தன்னை பொறுத்திக்கொண்டு அவர்களை தேடி பயணிக்கும் நபர் குறித்த கதைக்களம் தான் நித்தம் ஒரு வானம். சென்னையில் தன் தாய் தந்தையுடன் வாழ்ந்துவரும் அசோக்செல்வன் (பிரபா), சிறுவயதிலிருந்தே தான் உண்டு, தன் வேலை உண்டு என்று யாருடனும் நெருங்கிபழகாமல் 100 % பர்ஃபெக்ட்டான நபராக இருக்கிறார். இவர் படிக்கும் கதைப்புத்தகத்தில் வரக்கூடிய கதாப்பாத்திரங்களை தான் என்று நினைத்துக் கொள்வார். இதற்கிடையே தனக்கு நிச்சயிக்கும் பெண்ணை அதிகளவு விரும்பும் அசோக்செல்வன் அவளுக்காக நேரத்தை […]
