திண்டுக்கல்லில் நிதி நிறுவன உரிமையாளரிடம் திருமணம் செய்து வைப்பதாக கூறி ரூ.1 கோடியே 25 லட்சம் மற்றும் 40 பவுன் நகையை மோசடி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்துபழனியூரில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசித்து வரும் அறிவழகன் என்பவருடன் நட்பு இருந்து வந்துள்ளது. பாலசுப்ரமணியம் குஜராத்தில் தனியார் நிறுவனம் வைத்து வேலை செய்து வருகிறார். அதில் கிடைக்கும் லாப பணத்தை தனது வங்கி […]
