வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து கடனை வசூலிப்பதற்கு ஏஜென்ட்டுகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடன் வாங்கிவர்களை துன்புறுத்தும் விதமாக கடன் வசூலிப்பதற்காக கடுமையாக நடந்து கொள்ளும் ஏஜெண்டுகளுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நள்ளிரவில் கூட ஏஜெண்டுகள் அழைப்பு விடுத்து வாடிக்கையாளர்களை துன்புறுத்துவதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. மேலும் ஏஜெண்டுகள் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்திக் திட்டுவதாக புகார் வருகிறது என்பதை ஏற்றுக்கொள்ள […]
