எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒப்புக்கொண்டால் அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராக வருவதற்கு பீகார் முதல்வர் நித்திஷ் குமாருக்கு ஆட்சேபனை இல்லை என்று ஜேடியு கட்சி தெரிவித்துள்ளது. வருகின்ற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதே நித்திஷ் குமாரின் முக்கிய கவனம். பீகார் சட்டசபை தேர்தலில் அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதன் பிறகு பல்வேறு கட்சித் தலைவர்களை சந்திக்க நித்திஷ் குமார் டெல்லி வருவார் என ஜேடியு தலைவரான லலன்சிங் தெரிவித்துள்ளார். […]
