மதுரையில் வருகிற 29-ஆம் தேதி அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதன்பின் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில்தான் நகை கடன் மற்றும் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அப்படி இருக்கும் பட்சத்தில் தகுதி இல்லாத நபர்களுக்கு […]
